மாணவனுடன் கள்ளக் காதலை கண்டித்த கணவனை கொலை செய்த மனைவி!

பக்கத்து வீட்டு கல்லூரி மாணவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கணவரை மனைவி கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் பனையபுரம் காலனியை சேர்ந்த வேன் டிரைவர் லியோபால் (33). இவரது மனைவி சுஜிதாமேரி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

லியோபால் கடந்த மாதம் 4-ந்தேதி இரவு உறவினர் திருமணத்துக்கு சென்றதாகவும், அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை என சுஜிதாமேரி சென்னையில் உள்ள தனது மாமனார் சாகாயராஜிடம் கூறினார்.

மகன் காணமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, வீட்டில் குழந்தைகள் மட்டும் இருப்பதையறிந்து அவரது தாய் சுஜிதாமேரி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் பின்புறம் புதிதாக பள்ளம்தோண்டி மூடப்பட்ட தடம் இருந்ததையும் அவதானித்துள்ளார்.

மகன், மருமகள் மட்டுமின்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் காணவில்லை என்றும் வீட்டின் பின்புறம் புதிதாக பள்ளம் தோண்டப்பட்ட தடயம் உள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து நேற்று காலை பொலிசார் லியோபாலின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த சந்தேகத்துக்கிடமான இடத்தை தோண்டியுள்ளனர். அப்பொழுது அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

இதை அவதானித்த சகாயராஜ் குறித்த உடல் தனது மகன் லியோபால் தான் என்று உறுதிசெய்துள்ளார். மேலும் அவரது கழுத்து அறுக்கப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் இருந்துள்ளதையடுத்து பொலிசார் பிரேத பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர்.
பொலிசாரின் முதல்கட்ட விசாரணையில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(20). கல்லூரி மாணவரான இவரும், சுஜிதா மேரியும் அடிக்கடி பேசிவந்துள்ள நிலையில் நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையறிந்த லியோபால் இருவரையும் கண்டித்த நிலையில், மீண்டும் இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் தங்களது கள்ள காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் லியோபாலை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்த திட்டத்தை சுஜிதாமேரி அவரது கள்ளக்காதலன் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். அவரும் இதற்கு சம்மதித்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த லியோபாலை அவரது மனைவி சுஜிதாமேரி, கள்ளக்காதலன் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தார். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் குழிதோண்டி லியோபாலின் உடலை புதைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாக இருக்கும் மனைவி மற்றும் பக்கத்து வீட்டு நபர் இருவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *