இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்களை சந்தித்தார் இம்ரான்கான்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று பிற்பகல் விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சிறப்பு விருந்தில் கலந்து கொண்டதுடன் இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார்.
இந்த நிகழ்வில் அர்ஜுனா ரனதுங்கா, அரவிந்த டி சில்வா, ஹஷன் திலகரத்ன, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, சாமிந்தா வாஸ், ரோமேஷ் கலுவிதரண, சுசாந்திகா ஜெயசிங்க மற்றும் பல இலங்கை விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.





