வரலாற்று நாயகன் புரூஸ் லீ!

புரூஸ் லீ வெறும் திரைப்பட நாயகன் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கூட ஒரு சூப்பர் ஹீரோவாக திகழ்ந்தவர். நிஜ வாழ்க்கையிலும் தெருச்சண்டைகளில் பலரையும் ஓட ஓட துரத்தியடித்தவர் புரூஸ் லீ. அதனாலேயே என்னவோ திரைப்படங்களில் இருந்ததை விட அதிக வில்லன்கள் இவரது நிஜ வாழ்க்கையில் முளைத்தனர்.

இவரது வெற்றியையும், வளர்ச்சியையும் பலராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை பலர் வெறுத்தனர். மிக குறுகிய காலக்கட்டத்தில் மிக பெரிய வளர்ச்சியை கண்டவர் புரூஸ் லீ. குங்ஃபூ கலையிலும் சரி, அதிரடி நடிப்பிலும் சரி மின்னல் வேகத்தில் செயல்படுபவார் லீ. ஒரு நடிகன் தனது ஒரே திரைப்படத்தின் மூலம் மொத்த ஹாலிவுட்டையும் கலங்கடித்தான் என்றால் அது புரூஸ் லீயாக தான் இருக்க முடியும். விதியின் பயனோ அல்ல சதியின் பயனோ புரூஸ் லீ தனது 32வது வயதில் மரணமடைதார். இவரது மரணம் இன்றளவிலும் மர்மமாகவே இருக்கிறது

புயல் போன்ற அசைவுகள்

குங்ஃபூ கலையில் புரூஸ் லீ போல வேறு யாராலும் அவ்வளவு வேகமாக அசைவுகள் ஏற்படுத்த முடியாது. அரிசி அல்லது தானியத்தை வீசி எறிந்தால் அதை இரு குச்சிகளை பயன்படுத்தி பிடிப்பதில் வல்லவர் புரூஸ் லீ

தனது குங்ஃபூ பயிற்சியிலும், உடல் வலிமையிலும் பல பரிசோதனைகளை கடைசி வரை மேற்கொண்டு வந்தார் புரூஸ் லீ. இவர் குங்ஃபூவில் பல புதிய அசைவுகளையும் யுத்திகளையும் கையாண்டார்.

1962-இல் ஒரு போட்டியில் 15 பஞ்ச் மற்றும் ஒரு கிக்கில் தனது எதிராளியை வெறும் 11 வினாடியில் வென்று சாதனை புரிந்துள்ளார் புரூஸ் லீ.

ஒருவரை குத்த வேண்டும் எனில் குறைத்து ஒன்று அல்லது இரண்டடி தூரமாவது கையை ஒங்க வேண்டும். ஆனால், லீ வெறும் ஒரு இன்ச் தூரத்தில் மிக வலிமையான பஞ்ச் செய்பவர் ஆவார். இன்றளவும் யாராலும் இவரை போல பஞ்ச செய்ய முடியாது.

ஒற்றை கையில் அதுவும் தனது கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலை பயன்படுத்தி புஷ் அப்ஸ் எடுப்பதில் வல்லவர் புரூஸ் லீ.

புரூஸ் லீ 1958 ஆம் ஆண்டின் ச்சா ச்சா எனும் நடன சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வெல்லும் போது அவர் வெறும் 18 வயது வாலிபர்.

ஒருமுறை புரூஸ் லீக்கு முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்பால், அவரால் மீண்டும் எழுந்திரிக்க முடியாது என மருத்துவர்கள் கூறினார். விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற காயம் ஏற்பட்டால் அத்துடன் அவர்களது வாழ்க்கைக்கு முற்று புள்ளி தான் என கூறப்படும் அளவு கொடுமையான பாதிப்பு தான் அது. அதிலிருந்து மீண்டெழுந்து முன்பை விட வேகமாக செயல்பட துவங்கினார். மருத்துவத்தையும் வென்றவர் புரூஸ் லீ!!!

6 இன்ச் தடிமன் கொண்ட மரப்பலகைகளை மிக சுலபமாக அடித்து நொறுக்கிவிடுவார் புரூஸ் லீ.

குத்து சண்டையில் முகமது அலியின் அசைவுகளை மிகவும் ரசித்து பார்ப்பது லீக்கு பிடித்தமான ஒன்று.

வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொண்டதன் காரணமாய் ஏற்பட்ட அழற்சி தான் அவரது உயிரை பறித்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்

ஒரு முறை 50 பேருடன் ஒற்றை ஆளாய் நின்று சண்டையிட்டிருக்கிறார் லீ. துன்பம் என்னவெனில், அந்த 50 நபர்களையும் அடித்து துவம்சம் செய்துவிட்டார் லீ.

ஒருவரது அசைவை வைத்து வெறும் 0.05 நொடியில் கணித்து பஞ்ச் செய்யும் திறன் கொண்டவர் புரூஸ் லீ.

புரூஸ் லீக்கு குங்ஃபூ கற்றுக் கொடுத்த வாத்தியார் புரூஸ் லீயிடம் நீ இதை சீன மக்களுக்கு மட்டும் தான் கற்று தர வேண்டும் என வாக்குறுதி பெற்றுக் கொண்டார். ஆனால் லீ அதை காப்பாற்றவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *