தொடர் SEX தொந்தரவு கொடுத்த கணவரை கொலை செய்த மனைவி கைது!

அந்தியூரில் திருமணமான 7 மாதத்தில் தொடர்ச்சியாக உறவு வைத்த கணவனை விசம் கலந்து கொலை செய்த வழக்கில் 5 மாத கர்ப்பிணி மனைவியை பொலீசார் கைது சய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் ரோட்டில் உள்ள காளியண்ணன்கவுண்டர் தோட்டப்பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்தவர் நந்தகுமார்(வயது 35). இவருக்கு வீட்டை சேர்ந்தார் போல் மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இவர் தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயப் பணியை செய்தபடி, அந்தியூரிலுள்ள தனியார் மாவு மில்லில் ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் பவானி பெரிய மோளப்பாளையத்தைச் சேர்ந்த மைதிலி(வயது 20) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

மைதிலிக்கு அவரது 15 வயதிலேயே முதல் திருமணம் நடைபெற்று 16ம் வயதிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாயார் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவதாக நந்தகுமாருடன் திருமணம் நடைபெற்று கணவர் வீட்டில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நந்தகுமார் கடந்த 31ம் திகதி வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஒரே சமயத்தில் ஏற்பட்டதால் அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சோதனை மேற்கொண்டதில் அவரது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்ததையடுத்து ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நந்தகுமாரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக தெரிவித்ததையடுத்து மாஜிஸ்ட்ரேட் வரவழைக்கப்பட்டு நந்தகுமாரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. மரண வாக்குமூலம் கொடுத்த நந்தகுமார் கடந்த 15ம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் கொடுத்த மரண வாக்குமூலம் பொலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த மரண வாக்குமூலத்தில் கடந்த மாதம் 28 -ம் திகதி தனது விவசாயத் தோட்டத்தில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடித்து விட்டு வந்து உணவருந்தியதாகவும், உணவும் கசப்பது போலிருந்ததால் அம்மாவிடம் கேட்டபோது, ஒன்றுமில்லை நன்றாகத்தான் உள்ளது என தாய் கூறவே கசப்புடன் உணவருந்தியதாக கூறினார்.
அதற்குப் பின்னர்தான் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும், தனக்கு தனது மனைவியின் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். நந்தகுமாரின் மரணத்திற்குப் பிறகு நந்தகுமாரின் மனைவி மைதிலியிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரிடமிருந்து எந்தப் பதிலையும் பெற முடியவில்லை.
இதனிடையே இன்று காலை மீண்டும் விசாரணைக்கு அந்தியூர் காவல்நிலையத்திற்கு வந்த நந்தகுமாரின் மனைவி மைதிலியை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தனது கணவருக்கு உணவில் விஷம் வைத்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்,
அதற்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் தெரிவித்தார் அதில், திருமணமான முதல் மாதத்தில் தனது கணவருக்கு செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆர்வமே இல்லாத நிலையில் இருந்தார். பின்பு தனியார் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மாத்திரைகளைப் பெற்று வந்ததற்குப் பிறகு கடந்த சில மாதங்களாகவே செக்ஸ் தொந்தரவு அதிகமானதாகவும், இரவு பகல் 24 மணி நேரமும் பலமுறை தன்னை தொந்தரவு செய்து வந்தார்.
அதற்குப் பிறகு கர்ப்பம் உறுதியானதற்குப் பின்னரும் கர்ப்பிணியென்று கூட பாராமலும் தொடர்ந்து தன்னை வற்புறுத்தி வந்ததாகவும், எவ்வளவோ கூறியும் அதனை உதாசீனப்படுத்தி தனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

அந்த ஆத்திரத்திலேயே சம்பவத்தன்று மாமியாருக்கு தனியாக உணவையும், தனது கணவருக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த உணவையும் பரிமாறியதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மைதிலியைக் கொலை வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையினர் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறைக்காவலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *