நக்மா வாழ்க்கையில் விளையாடிய முக்கிய 2 பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக 90 காலக்கட்டத்தில் ஒரு காட்டு காட்டியவர் தான் நக்மா. அன்றைய காலத்தில் நக்மாவை பார்த்து ஏங்காத ரசிகர்களே கிடையாது.
அந்தளவுக்கு தன்னுடைய கேரியரில் கொடிகட்டிப் பறந்த நக்மா தற்போது 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் நக்மா காதலித்த அந்த இரண்டு பேர்தான் என்கிறார்கள் இணைய வாசிகள்.

முதலில் நக்மா கிரிக்கெட் வீரர்  கங்குலியை காதலித்தார் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான்.

கங்குலிக்கு திருமணம் ஆன விஷயம் தெரிந்தும் இருவரும் காதலித்து வந்தது பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதன்பின், கங்குலி தன்னுடைய குடும்பத்தை கருத்தில் கொண்டு நக்மாவை கைவிட்டதாக அப்போதே பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

அதேபோல் நக்மா அதிக நம்பிக்கை வைத்த இன்னொரு நபர் என்றால் அது நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தானாம்.

சரத்குமாருக்கும் நக்மாவுக்கு நிலையில் ஒரு உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சரத்குமாரும் நக்மாவும் நீண்டகாலம் காதல் போதையில் இருந்த நிலையில் சரத்குமாரின் குடும்பத்தில் ஏற்பட்ட சில சலசலப்புகள் காரணமாக இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க சரத்குமாரும் இறுதியில் கைவிட்டு விட்டாராம்.

இந்த இரண்டு காதல் தோல்விகளை தாங்க தாங்க முடியாமல் நொந்து வாழ்க்கையையே வெறுத்து விட்டாராம் நக்மா.

இதனால் தான் 46 வயதுக்கு மேலாகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என்கிறார்கள் இணையவாசிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *