இலங்கையில் உச்சத்தை தொடும் கொரோனா அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் மேலும் 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றைய தினத்தில் ஐந்து மரணங்கள் பதிவானது இன்று இதுவரை 963 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரண்டாவது நாளாகவும் நாட்டில் 900க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாட்டில் இதுவரை 72,174 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 976 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *