கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை காட்டும் அறிகுறிகள்!

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள். கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும். எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும். கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும். இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
இதற்கு சரியான தீர்வு அதற்கான ஊட்டச் சத்து இருக்கிறது அனுபவத்தினால் சொன்னால் செயல்படுத்த வா போகிறீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *