ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் மருத்துவர்களை பணியில் அமர்த்த திட்டம்!

ஜப்பான், எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக 10,000 மருத்துவ பணியாளர்களை பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

அதற்கான கோரிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

மூன்றாவது முறையாக அதிகரித்துள்ள கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் போராடிவரும் நிலையில், அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோ உட்பட, 11 வட்டாரங்களில் நெருக்கடி நிலை நடப்பில் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளால் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டால், மருத்துவ வசதிகள் அதனைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
போட்டிகள் இன்னும் சுமார் 6 மாதங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட அந்தப் போட்டிகள் குறித்து மீண்டும் ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *