இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிலியந்தல பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 03 இடங்களில்  இன்று (23) ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.

கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *