உடல் சூட்டை தணிக்கும் சேப்பைக்கிழங்கு!

சேப்பைக்கிழங்கை சேமைக்கிழங்கு, சாமைக்கிழங்கு என்றும் கூறுவர். இதன் நிஜப்பெயர் சேம்பு கிழங்கு.

*செடியினத்தைச் சேர்ந்த இந்த கிழங்கு நான்கு வகைகளில் விளைவிக்கப்படுகிறது.

*இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி என்ற உயிர்ச்சத்தும், இரும்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளன. இந்தக் கிழங்கு வழவழப்பு மிகுந்தது.

*இந்த கிழங்கினை நீரில் வேக வைத்து தோலை நீக்கிவிட்டு வறுவலாகவோ, சாம்பார் அல்லது மோர் குழம்பு வைத்துச் சாப்பிடலாம்.

*வாய்வுத்தன்மை கொண்டதால், வாய்வு சம்பந்தப்பட்ட பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த கிழங்கினை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
ஆரோக்கியமாக உள்ளவர்கள் கூட எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவது நல்லது. அவ்வாறு சாப்பிடும் போது இதில் நான்கு பல் பூண்டினை சேர்த்து சமைத்து சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லைக்கு உள்ளாக நேரிடும். அஜீரணக்கோளாறு ஏற்படும்.

*இக்கிழங்குடன் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், புளி போன்றவற்றைச் சேர்த்து சமைத்து உண்டால் பக்க விளைவுகள் குறையும்.

*உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இதற்கு நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் உள்ளது. இது ஆண்களுக்கு ஆண்மைக் குறைவைப் போக்கி புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

*இக்கிழங்கை அரைத்து கட்டிகளுக்கும், புண்களுக்கும் மருந்தாக வைத்துக் கட்டலாம். கட்டிகள் பழுத்து உடையும். புண்கள் சீக்கிரம் ஆறிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *