இன்று 674 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று கொரோனா தொற்றால் 674 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 03 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும், கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும், முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும், தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவரும மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
