அலி சப்ரியை அமைச்சுப் பதிவியிலிருந்து விலக்குமாறு வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு!


நீதியமைச்சர் அலி சப்ரி
சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ்
அதிகாரிகளாக நியமிப்பதற்கு அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை கற்ற மக்கள் சமூகத்தின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் தெரிவித்து , தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு அலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதிவியிலிருந்து விலக்குமாறு வலியுறுத்தி நாளை (17) ஞாயிற்றுக்கிழமை சிங்களே தேசிய கூட்டு ஒன்றியத்தினால் கண்டியில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பினால் இன்று (16) சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அரசாங்கத்தின் மிகவும் முக்கியத்துவமுடைய அமைச்சு பதவியை வகிக்கும் அமைச்சரான அலி சப்ரி இனங்களுக்கிடையில் பேதங்கள் ஏற்படும் வகையில் தெரிவித்த கருத்ததானது , 69 இலட்சம் மக்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரால் ஜனநாயகமுடைய சமூகத்தில் மக்கள் எதிர்பார்க்காததொரு விடயமாகும்.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்கின்ற போதிலும், சட்டத்தரணிகளை பிரதான பொலிஸ் அதிகாரிகளாக நியமிப்பதற்கு அமைச்சரவையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திரம் கற்ற மக்கள் சமூகத்தின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அலி சப்ரியை அமைச்சரவை அமைச்சு பதவியிலிருந்து விலக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதனை வலியுறுத்தி அமைதியான முறையில் கண்டி தலதா மாளிகை சுற்று வட்டாரத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *