அரிசி உணவை சாப்பிடலாமா?

நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் அரிசி உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது, அதிகம் சாப்பிடக்கூடாது, உடல் நலத்திற்கு தீங்கானது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். இப்பொழுது அரிசியில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.

👉 புழுங்கல் அரிசி எளிதாக மற்றும் விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக செரிமானம் ஆக ஒரு மணி நேரம் ஆகும்.

👉 உடல் மெலிந்து பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

👉 சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. மேலும் சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

👉 மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட, பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது.

👉 மூங்கில் அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்ய உதவும்.

👉 மாப்பிள்ளை சம்பா அரிசியில் புரதம், நார்ச்சத்து மற்றும் நிறைய தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இதை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.

👉 சீரகச் சம்பா அரிசி இனிப்பு சுவையுடையது. அதனால் அதிகமாக சாப்பிடத்தூண்டும். சிறுவாதம் நோய்களை வராமல் தடுக்க உதவுகிறது.

👉 திணை அரிசி இரத்தச்சோகையை போக்கக் கூடியது. அத்துடன், காய்ச்சல், சளித்தொல்லை இருந்தால் அதன் வேகத்தை குறைக்கும் ஆற்றல் திணைக்கு உண்டு. இதற்காக அதிகமாக சாப்பிட்டால் அது பித்தமாகவும் மாறிவிடும்.

யாரெல்லாம் அரிசி சாப்பிடக்கூடாது.:
👉 சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளை குறைத்து உண்ணலாம். அரிசி உணவில் இருக்கும் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே இரத்தத்தில் சேர்ந்து விடும்.

👉 இதனால் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இவர்கள் சாமை, திணை போன்றவைகளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

👉 நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும். இதனால் அரிசிகளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நம் உடலின் சக்தியாக சேரும்.

👉 ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக சேரும். அதனால் இரவில் அரிசி உணவை தவிர்ப்பது நல்லதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *