தனிமைப்படுத்தலை தவிர்க்கும் (GMOA) தலைவர்?

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியவின்  களனி, திப்பிட்டிகொட பிரதேசத்தில்  உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற  விருந்து நிகழ்வில்  கலந்துகொண்டிருந்த வைத்தியர் ஒருவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று (13)  உறுதிப்படுத்தினார்.

அனுருத்த பாதெனியாவுக்கு நெருக்கமான மூன்று குடும்பங்களின் சுமார் 20 உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். விருந்து 8 ஆம் தேதி நடைபெற்றது, கோவிட் தொற்று ஏற்பட்ட  மருத்துவர் மினுவங்கொடவின் உகல்கொடவில் வசிப்பவர்.

கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர் கண்டறிந்த பின்னர் விருந்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்துமாறு மினுவங்கொடா பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் அனுஜா பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்பட்ட  மருத்துவர் அவிசாவெல்ல தள   மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 10 ஆம் திகதி ஒரு திருமணத்திலும் அந்த  மருத்துவர் கலந்து கொண்டார். தற்போது அங்கோட தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்  அப்பகுதிக்கு பொறுப்பான மூன்று பொது சுகாதார ஆய்வாளர்கள் நேற்று (13) இரவு 7.45 மணியளவில்  அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனியாவின் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்த முயன்றனர், ஆனால் அந்த முயற்சி  தோல்வியடைந்தது. காரணம், மருத்துவர்  வீட்டின் கேட்டை  திறக்கவில்லை, வீட்டிலுள்ள மின்சாரத்தை அணைத்துவிட்டார்.

இதனால், பொது சுகாதார ஆய்வாளர்கள் களனியா பிராந்திய சுகாதார அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் இன்று (14) காலை சென்று தனிமைப்படுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *