பாராளுமன்ற கொரோனா கொத்தணி உருவாக அதிக வாய்ப்பு!

கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பமான புதுவருட பாராளுமன்ற அமர்வில்
பாராளுமன்ற உறுப்பினர்
ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளதோடு,

அவருடன் மிக நெருக்கமாக தொடர்புகொண்டவர்கள் தொடர்பிலான விபரத்தை அறிய பாராளுமன்ற CCTV காட்சிகள் பார்வையிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ரஊப் ஹக்கீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய பாராளுமன்ற கொத்தணி ஒன்று உருவாகும் வாய்ப்பு ஏற்படுமா என்பது தொடர்பில், சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருவதோடு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை, நேற்றையதினம் (09) இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேகச் செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *