சோளத்தில் உள்ள மருத்துவப் பயன்கள்!


சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரமாகும் ஆகும். இவற்றில் சில வகைகள் தானியங்களுக்காகவும் வேறு சில வகைகள் கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இன்னும் சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. சோளம் உலகம் முழுவதும் மிதமான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன.

சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். இதற்கு சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்ற வேறு பெயர்களும் உண்டு.

சோளத்தின் வகைகள்.:
வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம், என பலவகைப்படும்.

சோளத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்.:
சோளம் அரிசியைப் விட பல மடங்கு சத்துக்களை கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும். சோளத்தில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ்,
பொட்டாசியம், சோடியம்., வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *