வீட்டுக்கு லேட்டாக வந்த கணவன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்!

கணவன் வேலை முடித்து வீட்டிற்கு தாமதமாக வந்ததால் மனைவி அவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கணவன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டைம்ஸ் ஓஃப் இந்தியா கூற்றுப்படி மனைவி ஷிவ்குமாரி அஹிர்வார் கணவர் அரவிந்த் அஹிர்வாருடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அராவிந்த் தினசரி கூலித்தொழிலாளி. அவர் அடிக்கடி இப்படி வீட்டிற்கு தாமதமாக வருவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து இருவருக்குள் அடிக்கடி சண்டை, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் இருவரும் இரவு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின் சுற்றியிருந்த அவர்களுடைய உறவினர்கள் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்துள்ளனர்.

இருப்பினும் அதன் பிறகும் அரவிந்த் வீட்டிற்கு தாமதாமக வந்துள்ளார். இதனால் கடுமையான கோபத்தில் இருந்த ஷிவ்குமாரி அதிகாலை ஐந்து மணிக்கு தூங்கிக்கொண்டிருந்த கணவன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.
பின் வலியால் கத்திய அரவிந்தின் சத்தம் கேட்டு உறவினர்கள் விரைந்து சென்று அவர்களுடைய கதவைத் தட்டி உள்ளே சென்று பார்த்துள்ளனர். பின் விஷயம் தெரிந்து உடனே அரவிந்தை சாகரில் உள்ள பண்டேல்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு முகத்தில் அதிக தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக மனைவி அளித்த வாக்குமூலத்தில் “ எங்கள் இருவருக்கும் இரவு லேட்டாக வந்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். குடும்பத்தினர் அனைவரும் நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கொதிக்கும் எண்ணெய்யை முகத்தில் ஊற்றிவிட்டேன்” எனக் கூறியதாக டைம்ஸ் ஓஃப் இந்தியா பத்திரிக்கையில் பொலிசார் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பின் கணவன் அரவிந்த் தொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிவ்குமாரி மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *