அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும்!

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மக்களது உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை நமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளும் கட்சி தவறினால்
தனித்து பயணிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்

2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும். தமது கட்சியின் மாகாண சபை தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

எதிர்பார்க்கும் அளவில் நியாயமான வாக்காளர்கள் எண்ணிக்கை கட்சிக்கு கிடைக்கும் என்ற நிலைபாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கொவிட் தொற்றால் உயிரிழக்கும் மக்களது உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் இந்த நிலைப்பாட்டுக்கு இணங்குவதாக கூறியுள்ளார்.

13 ஆம் திருத்தத்தை ரத்துசெய்வது என்பதுஇலகுவான விடயம் இல்லை
13 ஆம் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரிசல் ஏற்படலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் இலங்கை இந்திய உறவு முக்கியம் வாய்ந்தது. மாகாண சபைகளை ரத்துசெய்வது என்பது தீயுடன் விளையாடுவதை போன்றது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *