தகனம் என்ற பிடிவாதக் கொள்கையால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது என்ற பிடிவாதமான கொள்கையால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
இவ்வாறு பிடிவாதமான நிலைப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பது துரதிஸ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாங்கள் முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்றால் நாங்கள் அதனை தவிர்க்கவேண்டும்.

ஆனால் இந்த விடயத்தில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக உள்ளது.
வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் அரசாங்கம் அதனை இரத்துச்செய்துவிட்டு கொரோனாவினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை பின்பற்றுகின்றது.

உடல்களை அகற்றுவதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலோ அல்லது விஞ்ஞான ரீதியிலான அடிப்படையிலேயோ அரசாங்கம் முன்னெடுத்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *