மிரட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியது!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,708,149 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 77,681,288 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54,533,935 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,112 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
தற்போது இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,76,86,841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,45,61,756 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 08 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,16,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,220 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது….