புதிய வகை கொரோனா வைரஸ் வீரியமாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது!

பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நமது கட்டுப்பாட்டை மீறி எல்லாம் இல்லை, அதைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் இருக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது .இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டது. நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமானதாக இருந்தது.

கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்தது. இந்த புதிய வகை வைரஸுக்கு ‘VUI 202012/01’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி, இந்தியா, சவூதி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகாலப் பிரிவின் தலைவர் மருத்துவர் மைக்கேல் ரேயான் நேற்று ஜெனிவாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:“ உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய கொரோனா வைரைஸக் கட்டுப்படுத்த சரியான வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.

நாம் இப்போது செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்தால் போதுமானது. ஆனால், இன்னும் சற்று தீவிரத்தன்மையுடனும், நீண்டகாலத்துக்கும் செய்வது வைரஸ் பரவலைக் கட்டுக்குள் வைக்கும்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், சில நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து தீவிரமான நடவடிக்கைகள், கடினமான கட்டுப்பாடுகள் தேவை. அப்போதுதான் உருமாறிய கொரோனா வைரஸ் சற்று வீரியத்தன்மை உள்ளதாக இருந்தாலும் அதை நம்மால் தடுத்துநிறுத்த முடியும்”.

இவ்வாறு மைக்கேல் ரேயான் தெரிவித்தார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *