மஹர சிறைச்சாலை கலவரத்தில் பலியானவர்களை எரிக்கத் தடை!

மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 11 கைதிகளின் உடல்களை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சி நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்களம் அளித்த அறிக்கையை வெலிசர நீதவான நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 11 கைதிகளின் உடல்கள் தொடர்பிலான தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை முடிவடையும் வரை சடலங்களை எதுவும் செய்யக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்கு முன்னதாக பரிந்துரைத்திருந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் வரை சடலங்களை அடக்கம் செய்வது அல்லது தகனம் செய்வது குறித்து தீர்மானிக்க முடியாது என அறிவித்துள்ள நீதவான் புத்த ஸ்ரீ ராகலா,

இது தொடர்பிலான அறிக்கையை உடனடியாக சமர்பிக்குமாறு, மஹர சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *