பிரதமரிடம் கையளித்த ஜனாஸாவை அடக்கம் செய்ய சாதகமான இடங்கள்!

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாம் (நிலத்தடி நீர் குறைந்த) என, அடையாளம் காணப்பட்ட சில பிரதேசங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளக்கிழமை, 11 ஆம் திகதி இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் தெரியவருகிறது.

கடந்த வியாழக்கிழமை, பிரதமர் மஹிந்த தலைமையில், அலரி மாளிகையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.

இதன்போது கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகள் மற்றும் தண்ணீர் ஊற்று குறைந்த பிரதேசங்களை சிலதை அடையாளம் கண்டு அதனுடன் மண்ணின் மாதிரிகளையும் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அமைச்சர் வாசுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய உடனடியாக செயற்பட்ட அமைச்சர் வாசு இந்த இடங்களை நிபுணர்களின் ஆதரவுடன் 24 மணித்தியாலங்களுக்குள் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட இடங்களின், வர்ண வரைபடங்கள் குறித்த இணையத்திற்கு கிடைக்கப்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *