ஜனாசா எரிப்பு விவகாரம் முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிப்பதாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரிவிப்பு!

Covidx19 வைரஸ் தொற்று காரணமாக மரணம் அனைவரது உடல்களையும் கட்டாயமாக தகனம் செய்ய வெண்டுமென்ற இலங்கை அரசின் தீர்மானம் முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கச் செய்து உள்ளது என ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் வெளி விவகாரம் மற்றும் அபிவிருத்தி அமைச்சருமான நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார்

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் இலங்கை அரசு covid 19 தொற்றால் மரணிக்கும் அனைவரினதும் சடலங்கள் கட்டாயமாக தகனம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் குறித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரும் அதிகாரிகளும் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரை தொடர்பு கொண்டு அவர் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள் இலங்கை கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் உறுதி செய்யுமாறும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்துடன் கூறப்பட்டு வருகிறது என்றார்

இதேவேளை ஐக்கிய இராச்சியத்தில் இயங்கும் இலங்கை மக்களின் உரிமைகளுக்கான குழு (PRG) இலங்கை அரசு நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் பலாத்காரமாக தகனத்தை நிறுத்த வேண்டும் எனவும் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது அத்தோடு ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சரின் கருத்துக்களை வரவேற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *