ஏழைகளுக்கு உதவுவதற்காக 10 கோடி ரூபா சொத்துகளை அடகு வைத்த நடிகர்!

ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ. 10 கோடிக்கு தனது 8 சொத்துக்களை நடிகர் சோனு சூட் அடகு வைத்திருப்பது தற்போது வெளியாகியள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிரமப்பட்டு வந்தனர். இதனை புரிந்து கொண்ட நடிகர் சோனு சூட், சிறப்பு பேருந்துகள் மற்றும் விமானங்களின் மூலம் அவர்களை அனுப்பி பேருதவியை செய்தார். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கி தவித்தவர்களையும் சொந்த செலவில் தாயகம் அழைத்து வந்தார்.

அவரது உதவி இதோடு நின்று விடவில்லை. ஏழை விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, மலைக்கிராம மாணவர்களின் ஆன்லைன் படிப்பிற்கு ஏதுவாக செல்போன் டவர் அமைத்து கொடுத்தது, அறுவை சிகிச்சை உதவிக்கு பணம் தேவைப்படுவோருக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறது. கொரோனா சமயத்தில் திரைப்பட வாய்ப்புகளும் இல்லாததால், அவர் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளார்.

எனவே, ஏழை மக்களுக்கு உதவுவதற்காக தனது மற்றும் மனைவி சோனாலி பெயரில் உள்ள இரு கடைகள் மற்றும் 6 குடியிருப்புகளின் பத்திரங்களை ரூ. 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி ரூ. 10 கோடி லோன் கேட்டு இருப்பதாக மணி கண்ட்ரோல் வர்த்தக செய்தி தளம் தகவலை வெளியிட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, கொரோனா காலத்தில் வருமானம் இல்லாத நிலையிலும், சொத்துக்களை அடமானம் வைத்து தொடர்ந்து உதவிகளை செய்து வரும் சோனு சூட்டின் செயல்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *