மலரவிருக்கும் 2021 ஆம் வருடம் படுமோசமான ஆண்டாக இருக்கும்!

ஐக்கிய நாடுகள் சபையின் கீழியங்கும் அமைப்புக்களில் ஒன்றான உலக உணவுத் திட்ட(WFP) அமைப்பின் தலைவர் டேவிட் பீஸ்லி “வரவிருக்கும் 2021 ஆனது ஐ.நா சபையின் ஆரம்பக் காலத்திலிருந்து இதுவரை என்றும் காணாத படு மோசமான வருடமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

அமைப்பின் சேவைகளுக்காக நோபலின் அமைதிப்பரிசைப் பெற்ற பீஸ்லி தனது செய்தியாக “உலகின் வறிய நாடுகளில் சுமார் 12 நாடுகளின் கதவை பஞ்சமும், பட்டிணியும் தட்டிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கள் கவனமோ அமெரிக்காவின் தேர்தலைப் பற்றியும், கொவிட் 19 இன் பரவலையும் பற்றியே இருக்கிறது. அந்த வியாதியின் விளைவால் உலக நாடுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் பஞ்சம், பட்டிணி என்ற இன்னும் மோசமான வியாதியை நாம் எதிர்கொள்ளப்போகிறோம். உரிய நேரத்தில் இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கத் தவறுவோமானால் அதனால் பல மில்லியன் மக்கள் இறக்கப்போகிறார்கள், பாதிக்கப்படப்போகிறார்கள்,” என்று எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *