குர்ஆனில்கூறியவாறு வாழ்ந்து மரணிக்கும் முஸ்லிம்களின் இறுதி உரிமையை மறுக்காதீர்!

கொவிட் 19 தொற்று காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காதே என்று  முஸ்லிம்கள் கேட்பது அவர்களின் உரிமையையே. உங்களின் அரசியலுக்காக அல்குர்ஆன்படி வாழ்ந்து மரணிக்கும் முஸ்லிமின் இறுதி
உரிமையை மறுக்க வேண்டாம்
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்;

முஸ்லிம்களின் இறுதி கடமையை கூட செய்ய அனுமதிக்காத இந்த அரசாங்கத்தின் 20 வது அரசியலமைப்பு சீர் திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்து வெட்கப்படுகிறேன்

சஹரானை உருவாக்கியவர்கள் யார்?
அளுத்கமையில் நடந்தது என்ன? அதை யார் உருவாக்கினார்கள்? மலட்டு மருந்து கதையை யார் உருவாக்கினார்கள்? வைத்தியர்கள் மீது குற்றச்சாட்டு வைத்தது யார்? அரசே இவற்றையெல்லாம் உருவாக்கியது.

உங்கள் ஜனாசாக்களை அடக்க அனுமதிதர மறுக்கும் அரசாங்கத்துக்கு நீங்கள் ஆதரவளித்துள்ளீர்கள். முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களை பார்த்து நான் வெட்கப்படுகின்றேன் ஒரே ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினரை தவிர அனைவரும் அரசுக்கு சார்பாக 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.

தமிழர்கள் இறந்தவர்களை நினைவு கூற நீதிமன்றம் செல்கிறார்கள், இஸ்லாமியர்கள் இறந்த உயிர்களை எரிக்காது புதைப்பதற்காக நீதி கேட்டு நிற்கின்றார்கள், கிறிஸ்த்தவர்கள் இறந்தவர்களுக்கு இன்னும் நீதி நிலை நாட்டப்படாததற்கு வருந்துகிறார்கள்… இது தான் இலங்கை நாட்டின் நிலமை

என்று தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டார் நாடாளுமன்ற உருப்பினர் சாணக்கியன்

எத்தனை வருடங்களானாலும் எம்மை எமது இனத்தை அழிக்க முடியாது. 
“நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர்.
நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்புவாக்களை பெற்றுக் கொண்டே இந்த நாடாளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதான அரச ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முகப்புத்தகத்தில் சில பதிவுகள் Tag செய்யப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்துள்ள அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவர்களை கைது செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை கைது செய்து சிறையிலடையுங்கள்.

அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதனை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். அதேபோன்று அரசாங்கம் ஏனைய விடயங்களை மறைப்பதற்ககாக இவ்வாறு அப்பாவி இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

கார்த்தீகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்தீகை விளக்கேற்ற தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒருசில இடங்களில் மக்கள் விளக்கினை ஏற்றுவதற்காக சிறிய அலங்காரங்களை செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றிய போது. சரத்வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட முடிந்ததாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *