பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

பனை மரத்தின் பயன்கள் ஏராளம். பாமிரா பாம்’ என்ற அறிவியல் பெயர் கொண்ட பனை மரம், தமிழகத்தில் அதிகம் காணப்படுகிறது. இதன் மரம், இலை, நுங்கு, இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்கள், என, 800 வகைகளில் மனிதர்களுக்கு பயன் அளிக்கிறது.
அதில் இருந்து தயாரிக்கப்படும் உபபொருட்களில் முக்கியமானது, பனங்கற்கண்டு.

1) பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரை காய்ச்சி பெறப்படும் இது, பழங்காலம் முதலே, மருத்துவ ரீதியாக தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதில், 24 வகையான இயற்கைச் சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு பனங்கற்கண்டு பேருதவி புரிகிறது.

2) வாதம், பித்தம் நீக்கவும், பசியை தூண்டி விடவும் பயனுள்ள மருந்து. உடலுக்கு புஷ்டி தருகிறது. நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பலவற்றில் இது சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கூட்டங்களில் பேச வேண்டிய கட்டாயம் இருக்கும் பேச்சாளர்களுக்கு பிடித்தமானது பனங்கற்கண்டு.

3) பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுக்கிறது. பற்களில் ஏற்படும் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து, உடல் பித்தத்தை நீக்குகிறது. சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் போக்குகிறது.
கண் நோய், ஜலதோஷம், காசநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பனங்கற்கண்டு, பசும்பால், மிளகு கொண்டு தயாரிக்கப்படும் பால், தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமானது.

4) முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கருநிற பனைவெல்லம், கருப்பட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக மாற்றும்போது, பனங்கற்கண்டு கிடைக்கிறது.

5) பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் சூடு ஆகியவற்றை தணிக்க, பேருதவி புரிகிறது.

இப்படிப்பட்ட பயனுள்ள பனங்கற்கண்டை உங்களின் இல்லம் வந்து சேர்ப்பது எங்கள் நோக்கம். பிடித்திருந்தால் அதிகமாக பகிர்ந்து ஆதரவு கொடுங்கள் 🙏.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *