இலங்கையில் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்!

இலங்கை வெப்பநிலை 35 பாகை செண்டிகிரேட்டைத் (35°C) தாண்டுவது வருடத்தில் 20 நாட்களிலிருந்து 2090 இல் 100 நாட்களாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. முக்கியமாக நாட்டின் வடபகுதி இதனால் மோசமாகத் தாக்கப்படும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கி தனது ஆராய்ச்சிகள் மூலம் சுட்டிக்காட்டுகிறது.

மனித உடல் இத்தகையை உயர்ந்த வெப்பமுள்ள காற்றில் சிறிது நேரம் நிற்பதே ஆபத்தானது. இத்தகைய வெப்பநிலையில் மனித உடல் தனது வெப்பநிலையில் சம நிலையை உண்டாக்குவது நடக்காமல் போவதால் சுகவீனங்கங்களும், துரித இறப்புக்களும் ஏற்படும்.
இப்படியான நிலைமை உண்டாகிவருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உலகத்தின் காலநிலையானது வேகமாக வெம்மையாகி வருவதாகும். அது மனிதர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் உண்டாகிறது.

எமது வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிடில் ஏற்படப்போகும் இந்த மோசமான விளைவுகளைத் தடுக்க இயலாது என்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *