மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக மத்திய மாகாணம் அச்சுறுத்தலில்!

.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டத்திலேயே கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 121 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில் 112 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 27 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 16 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் மொத்தமாக 401 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் மத்திய மாகாணத்தில் 44 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக, மத்திய மாகாணத்திலேயே நேற்றைய தினம் அதிகளவிலான புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *