பாடசாலை கொத்தணியை உருவாக்க வேண்டாம்!

நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், நாளை (23) தரம் 6 முதல் உயர்தரம் வரை பாடசாலைகள் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளீர்கள். இன்றுவரை மரணங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. தொற்றாளர் எண்ணிக்கை உயர்ந்தே செல்லுகின்றது. ஆடைத் தொழிற்சாலை கொத்தணியும், பேலியகொட கொத்தணியும் நாடு முழுவதும் பரவியுள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பிக்கும்போதே ஆடைத்தொழிற்சாலை நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். அதன் காரணமாகவே பரீட்சையை இரு வாரங்களுக்காவது ஒத்திவைத்து தொற்றைக் கட்டுப்படுத்திய பின்னர் பரீட்சையை நடாத்துங்கள் என கேட்டோம். பரீட்சை தொடர்ந்தது. தொற்றோடு மாணவர்களும் பரீட்சை எழுதினர். அதனை இயல்பு நிலையென கருதிய மக்கள் சாதாரணமாக நடந்து கொண்டனர். அதன் விளைவே இன்றைய மோசமான நிலைக்கும் காரணம்.

நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *