இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை ஏமாற்றமாகவே முடிந்தது!

இந்திரா பிரியதர்ஷினி ஆக்ஸ்போர்டில் உயர் கல்வி பயின்றபோது, அவரது வருங்கால கணவர் பெரோஸ் காந்தி லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ்சில் படித்துக் கொண்டிருந்தார்.. படித்துக் கொண்டிருக்கும் போதே, இந்திய சுதந்திர போராட்டத்திலும் ஆர்வமிக்கவராக இருந்தார் பெரோஸ் ..

இந்திரா தனது தாயார் கமலா நேருவை உடல் நலமின்மையால் லண்டன் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது தான் பெரோஸ் காந்தியுடன் அறிமுகமாகிறார். தனது 23 வயதிலே காதல் வயப்படுகிறார் .. எங்களுக்கு திருமணம் நடத்தி வையுங்கள் என தனது தந்தை நேருவிடம் வேண்டுகோள் வைக்கும் போது, அவருக்கு வயது 24.

பெரோஸ் பார்சி இனத்தை சார்ந்தவர், இந்திரா உயர் இந்து சாதியைச் சேர்ந்தவர் .. நேரு இதில் முரண்படவில்லை .. பரிபூரண சம்மதம்தான் அவருக்கு .. ஆனாலும் மகள் இன்னும் பக்குவம் பெற வேண்டுமென நினைக்கிறார். ஆனால் கொண்ட காதலில் உறுதியாய் நிற்கிறார் இந்திரா.

நேரு குடும்பத்தின் சில உறவுகள் மற்றும் காங். கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்த போதும், நேரு உறுதியாக இருந்து, காந்தியடிகள் மூலம் எதிர்ப்பாளர்களை சரிகட்டி திருமணத்தை நடத்தி வைத்தார்.. திருமணம் நடந்த காலங்களில் இந்திரா ஒரு நுரையீரல் நோயாளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த ஓராண்டிற்குள்ளே காதல் தம்பதியினர் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் கலந்துக் கொண்டு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தனர்.

தனது காதல் திருமணம் மூலம் ராஜீவ், சஞ்சய் என புதல்வர்கள் கிடைத்தாலும் அவரது காதல் திருமண வாழ்வு கசப்பாகவே இருந்தது.. தனது ஆஸ்துமா நோய் அவருக்கு குடும்ப வாழ்வில் சந்தோஷத்தை அளிக்கவில்லை போலும்.. பேரழகன் பெரோஸ் ஒரு காதல் மன்னனாகவே வாழ்ந்து வந்தார் .. கூடவே எம்மி எனும் பெண்ணுடன் நெருக்கமாக வாழ… இவர்களது திருமண வாழ்வு கருத்து வேறுபாடோடு பிரிந்தது .. இறுதி காலத்தில் பெரோஸ் மாரடைப்பு ஏற்பட்டு நலிவுற்ற போது, இந்திரா மீண்டும் அவரை அரவணைத்தார், அந்த நிலையிலும் அவரை நேசித்தார் .. ஆனாலும் அந்த அரவணைப்பு நிலைக்கவில்லை, சில மாதங்களிலே இறந்து போகிறார் பெரோஸ் காந்தி ..

ஒரு பெரிய செல்வந்தர் குடும்பத்தில், அதிகாரம் மிக்க தலைவரின் மகளாக, பேரழகியாக அவர் பிறந்திருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை ஏமாற்றமாகவே முடிந்தது, ஆனாலும் பொது வாழ்வில் தனது தனிப்பட்ட வாழ்வின் நிழலை கூட பிரதிபலிக்காது ஒரு வீரப்பெண்மணியாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *