அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, 2ம் அலை துவங்கி விட்டது மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்தும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மெக்சிகோ, ஆஸ்திரியா, இத்தாலி, பிரேசில், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து, கடந்த டிசம்பரில் பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் இதுவரை 5 கோடியே 43 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 13 லட்சத்து 18 ஆயிரத்து 144 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நவம்பர் மாத துவக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் புதிதாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர், இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் என இந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மெக்சிகோவில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்ற நிலையில் தற்போது மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

பிரேசிலில் இதுவரை 58 லட்சம் பேர், ரஷ்யாவில் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடத்திலும், பிரேசில் 3ம் இடத்திலும், ரஷ்யா 5ம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகளிலும் தினமும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, தினமும் அதிகாரித்து வரும் இறப்புகளை கணக்கிட்டு, கொரோனாவின் 2ம் அலை பரவத் துவங்கி இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவின் 2ம் அலை துவங்கியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *