WhatsApp மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி!

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, மெசேஜ்கள் 7 நாட்களுக்குள் தானாக மறைந்துவிடும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப்பிலும் இதனை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் நீங்கள் ஃபார்வர்டு செய்யும் மெசேஜ்களை உங்களால் மறைய வைக்க முடியாது.

இந்த ஒப்ஷன் தேவையில்லை என்றால் நீங்கள் இதனை பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். எத்தனை நாட்களுக்குள் மெசேஜ்கள் அழிய வேண்டும் என்பதை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது.

ஒருவேளை இந்த ஒப்ஷனை On செய்திருக்கும் போது, வாட்ஸ் அப்பை 7 நாட்களாக பார்க்கவில்லை என்றால், மெசேஜ் தானாக மறைந்துவிடும்.
ஆனால் அந்த மெசேஜின் முன்னோட்டம் Notification – ல் வரும். அதேபோல் இந்த ஒப்ஷனை நீங்கள் தேர்வு செய்துவிட்டால் மறையும் மெசேஜ்களை Backup எடுக்கும் வசதி இருக்காது.

நீங்கள் யாருடைய Chat-ல் மெசேஜ்கள் மறைய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவர்கள் பெயரை Open செய்து கொள்ளவும். அதில் உள்ள Disappearing Messages ஆப்ஷனை கிளிக் செய்தால், Continue என்ற வார்த்தை வரும். அதனை கிளிக் செய்து, on/off ஒப்ஷனில் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

குரூப் மெசேஜ்களுக்கு இதே முறைதான் உள்ளது. நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டுமே இந்த புதிய ஒப்ஷனை பயன்படுத்துமாறு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *