பிரான்ஸை தொடர்ந்து கனடாவில் கத்திக் குத்து 2 பேர் பலி!

கனடாவில் பழங்கால ஆடை அணிந்த நபர் ஒருவர் நேற்று திடீரென கத்தியால் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கியூபெக் நகரில் உள்ள பாராளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில், சாட்டேவ் ஃபிரான்டெனாக் அருகே நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் சந்தேக நபரைத் தேடும் பணியில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டினுள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் விரைந்து வருவதைக் காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே அதிகாலை 1 மணிக்கு முன்னதாக, உள்ளூர் போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதை பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது.

அதே சமயம் ஆயுதமேந்திய அதிகாரிகள் தொடந்து நகரில் ரோந்து சென்று கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியுள்ளதாக ஆரம்ப தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக கனேடிய போலீஸ் அமைப்பான கார்டா தெரிவித்துள்ளது.

எனினும் எந்தவொரு இறப்பு அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவர்கள் இன்று ஒரு அறிக்கையை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ரேடியோ கனடா எனும் அரசு ஊடகம் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *