அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான வைத்தியர் அநுருத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வயோதிபர்கள் மற்றும் தொற்றுநோய் ஆகியவற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நமது நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு நூற்றுக்கு 0.2 வீதத்தில் காணப்படுகின்றது. ஆனால் உலக நாடுகளில் 2 அல்லது 3 என்ற ரிதியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாட்டில் தொடர்ந்தும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக 9 வழிமுறைகளை அறிவித்துள்ளோம்.

இதிலே பிரதானமாக விநியோக நடவடிக்கைகள் ஊடாக தொற்று பரவுவதை தடுத்தல். மின் விற்பனை மற்றும் ஆடை தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்ட தொற்றுபரவல் பேன்றவற்றைக் கட்டுப்படுத்துவது.

இதற்கு குறித்த தொழிற்தளங்களில் முறையாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையே காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே இதுபோன்ற விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது. இந்த நிலையில் 490 பொலிஸ் பிரிவுகளில் 200 மேற்பட்ட பிரிவுகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் நாட்டை முழுமையாக முடக்க வேண்டி ஏற்படும்.

ஆகவே அந்த நிலை ஏற்படாத விதத்தில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி செல்லவே நாம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான வைத்தியர் அநுருத்த பாதெனிய மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *