இறந்த கொரோனா நோயாளிக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதித்து உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை மிக எச்சரிக்கையோடு கையாண்டு நல்லடக்கம் செய்துவந்த நிலையில், பெங்களூருவில் முதல் முறையாக கொரோனாவால் இறந்தவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்து பலியான ஒருவரின் உடல் 15 மணி நேரத்துக்குப் பின், தடயவியல் துறை நிபுணர் மருத்துவர் தினேஷ் ராவ், உடற்கூராய்வு செய்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் பயின்ற மருத்துவர் ராவ், கொரோனா பாதித்து உயிரிழந்த 60 வயது முதியவரின் உடலை உடற்கூராய்வு செய்தார்.

இதுவரை கொரோனா பாதித்தவர்களின் உடல்களை பாதுகாப்பான பைகளில் போட்டு கூடுமான அளவுக்கு விரைவாக நல்லடக்கம் செய்து வந்த நிலையில், கொரோனா தொற்று ஒரு மனிதனின் உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை கண்டறியும் வகையில் உடற்கூராய்வு செய்து, பல அதிர்ச்சிகரமான தகவலை கண்டறிந்துள்ளார்.

இவர் தன்னந்தனியாக செய்த உடற்கூராய்வில் தெரிய வந்திருக்கும் பல முக்கிய விஷயங்களில் மிகக் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், உயிரிழந்த கொரோனா நோயாளியின் கழுத்து, முகம், தோல் பகுதிகளில் கொரோனா தொற்று இல்லை.

அவ்வளவு ஏன், அவர்களது உள்ளுறுப்புகளில் கூட நுரையீரல், மூச்சுக்குழாய் பகுதிகளில் கூட கொரோனா தொற்று இல்லை. இப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எங்குமே கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனையில் அந்த நபரின் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் என்பது, பஞ்சால் ஆன பந்து போல மென்மையாகக் காணப்படுவது வழக்கம், ஆனால், அந்த நபரின் நுரையீரல் தோலால் செய்யப்பட்ட பந்து போல கனமாக இருந்துள்ளது.

“நுரையீரல் என்றால் வழக்கமாக 600 – 700 கிலோ கிராம்தான் இருக்கும், ஆனால் கொரோனா நோயாளியின் நுரையீரல் மட்டும் 2.1 கிலோ இருந்தது. தொடும்போது மென்மையாக இருக்கவில்லை, மிகக் கடினமாக இருந்தது, ஆங்காங்கே ரத்தத் திட்டுக்கள் காணப்பட்டன.

அதைப் பார்க்கும்போது, கொரோனா வைரஸ் இந்த நுரையீரலை அப்படி என்னதான் செய்திருக்கும்? என்று நினைக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் ராவ். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி அந்த நோயாளி 14 நாள்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் பலியாகியுள்ளார்.

இந்த உடற்கூராய்வு மூலமாக நமக்கு ஒரு மிக முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் என்பது, உலகத்தின் பிற நாடுகளில் இருப்பதைப் போல அல்லாமல் இந்தியாவில் வேறு வகையில் மக்களை பாதிக்கிறது.

அதாவது, அதன் பாதிப்பு இந்திய மக்களிடையே வேறாக உள்ளது, அது நுரையீரலை தாக்குவது இத்தாலி அல்லது உலகின் வேறு நாடுகளில் காணப்படுவதைப் போல் அல்லாமல் வேறுபட்டு உள்ளது என மருத்துவர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *