அரசியலில் எதுவும் நடக்கலாம்!

இலங்கையில் 1978-இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன ஜனாதியாக இருந்த காலத்தில் எல்லா அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு தான் என்று சட்டங்கள் திருத்தப்பட்டன.

2015-இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத்தின் 19 (ஏ) பிரிவு திருத்தப்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களைத் தரும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்கான அரசியல் சாசன 20-வது திருத்த மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. இரவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் இந்த மசோதா மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
அதாவது 225 பேரை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர்.

இதனால் ஜனாதிபதிக்கு மேலும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் 20-வது சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆளும் ராஜபக்ச கட்சியைச் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) சேர்ந்த எம்.பிக்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால் இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களின் ஆதிக்கம் வலுபெற்று தமிழர்களை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துவிடும்.

விவாதத்தின் தொடக்கத்தில் “No for 20A” என ஸ்ரிக்கர் அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், விவாத முடிவில் 20A-விற்கு ஆதரவாக வாக்களித்தார்.

கடைசி நிமிடத்தில் அவரது முடிவை மாற்றிய அந்த ‘டீல்’ என்ன என்பது மர்மமாகவே உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *