மனிதர்கள் செய்யும் 6 தவறுகளால் சிறுநீரகங்கள் பாதிப்படைகிறது!

மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும். சிறுநீரகம் என்பது கழிவுகளை மட்டுமே வெளியேற்றுகிறது என்று பலர் கருதுகின்றனர் அதுதான் தவறு சிறுநீரகம் நமது உடலில் பல வேலைகளை செய்கிறது. சில ஹார்மோன்களையும் உடலுக்கு தேவையான சக்தியையும் உருவாக்குகிறது. இந்த சிறுநீரகத்தில் எந்த பாதிப்பும் வரும் வரை அதை பற்றி யாரும் கவனம் கொள்வதில்லை. அந்த சிறுநீரகத்தில் பாதிப்பு வரும் போதுதான் அதனை பற்றி கவலை கொள்கிறோம். ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது.

இந்த ஆறு பழக்கங்கள் சிறுநீரகங்களை பாதிக்கிறது.

6.பட்டினி கிடப்பது

நீங்கள் உணவு உண்ணாமல் இருக்கும் போது சிறுநீரகங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற்று தருகிறது. இதே போன்று தொடர்ச்சியாக உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பது ஒரு கட்டத்தில் சிறுநீரங்களை பாதிக்கும். காலை உணவினை தவிர்க்க கூடாது.

5.அளவுக்கு அதிகமான வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துவது

வலி நிவாரண மருந்துகளை அளவுக்கு அதிகமாக ஒருவர் பயன்படுத்தும் போது அது சிறுநீரகத்தை பாதிக்கிறது.

  1. அளவுக்கு அதிகமான மது அருந்துதல்

மது அருந்துவது சிறுநீரகங்களை பாதிக்கிறது. எந்த உணவும் அருந்தாமல் வெறும் வயிற்றில் மது அருந்துவது சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கிறது.

3.உணவில் அதிகமான உப்பு சேர்த்தால்

உணவில் சமையல் உப்பு என்பது அளவுடன் இருக்க வேண்டும். அந்த உப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகத்துக்கு அதிக வேலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்.

2.போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது

சிறுநீரகத்துக்கு தண்ணீர் என்பது மிக முக்கியமான ஓன்று. உடலில் ஏற்படும் கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் மிக முக்கியமானது. இன்றய காலதில் படிக்கும் இளைஞர்கள் முதல் பலரும் வேலை பளு காரணமாக போதிய அளவு தண்ணீரை அருந்துவது இல்லை இதனால் சிறுநீரதுக்கு பாதிப்பு ஏற்படும். சிலர் தாகம் ஏற்படும் போது மட்டும் தண்ணீர் அருந்துகின்றனர். உப்புகள் நிறைத்த தண்ணீரை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

1.சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது

இவ்வாறு செய்வது மிகவும் தவறு. இவ்வாறு செய்வதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கல்லை ஏற்படுத்தும். காலப்போக்கில் சிறுநீரகத்திழும் சிறுநீரக பையிலும் கிருமி தொற்றை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் செயல்பாட்டை பாதிக்கும். இந்த தவறை நிட்சயமாக யாரும் செய்ய கூடாது.

இந்த ஆறு பழக்கங்கள் மட்டுமல்லாமல் அதிகமான இனிப்பு சேர்க்கப்பட்ட உணவு, எண்ணெயில் பொறித்த உணவுகள், அளவுக்கு அதிகமான இறைச்சி போன்ற உணவுகளும், புகைபிடித்தல், சரியான தூக்கமின்மை, நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது போன்ற செயல்களும் சிறுநீரகததை பாதிக்கிறது.

ஒருவேளை சிறுநீரக மண்டலம் சம்பந்தமான பாதிப்பு ஏற்படும் போது அதனை சரிசெய்வது சற்று சிரமமான காரியம். வருமுன் காப்பதே சிறந்தது skp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *