இலங்கையில் 64 பேர் ஒவ்வொரு நாளும் புற்றுநோயால் பாதிப்பு!

இலங்கையில் 64 பேர் தினசரி புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் 38 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் டாக்டர் ஜானகி விதானபதிராணா குறிப்பிடுகின்றனர்.

2008 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது இலங்கை புற்றுநோயாளிகளில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றார்.

புற்றுநோயிலிருந்து விடுபட ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களிலிருந்து விலக வேண்டும் என்று பொது மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவமனைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *