இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் 7 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் உள்ளன!

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் 07 இலட்சத்து 95 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்குறித்த அத்தனை வழக்குகளிலும்ஆஜராகும் சட்டத்தரணிகளின் விபரங்களை என்னால் சபையில் தெரிவிக்க முடியாது. அது எனது வேலையுமல்ல என பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம்.பி சமிந்த விஜேசிறி குருநாகல் சர்ச்சைக்குரிய டாக்டர் ஷாபி தொடர்பில் கேள்வி ஒன்றை எழுப்பினார்.அதற்கு பதிலளித்த அமைச்சர்,

நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் சபையில் என்னால் பதில் சொல்ல முடியாது அது எனது பொறுப்புமல்ல.

நாம் நீதி அமைச்சுக்கு மட்டுமே எமது பணிகளை மட்டுப்படுத்தி செயற்படுகின்றோம். உங்களுக்கு தேவையானால் அத்தகைய விபரங்களை விண்ணப்பித்து பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்தும் மேற்படி தகவல்களை எங்கு பெறுவது போன்ற கேள்விகளை தொடர்ந்தும் எழுப்பிய சமிந்த விஜேசிறி எம்.பிக்கு பதிலளித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் போன்று தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுப்பதோ அல்லது நபர்களை தெரிவு செய்துகொண்டு நீதிமன்றத்தை அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் அன்றி நிதியமைச்சின் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே நீதியமைச்சர் ஆகிய நாம் மேற்கொள்ளும் பணி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *