மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. கடந்து வந்த பாதை!

பத்ம ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் சாதனைத் தடங்கள் சில…

1966ல் இசையமைப்பாளர் கோதண்டபாணி அவர்களால் பாடகராக அறிமுகம் ஆனார்.

தமிழில் முதல் பாடல் “இயற்கை எனும் இளைய கன்னி”.திரைப்படம் சாந்தி நிலையம்.

சில நூறுகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எஸ்பிபியை சில ஆயிரம் சம்பளம் வாங்க வைத்த பாடல் “ஆயிரம் நிலவே வா”.

முறைப்படி சங்கீதம் கற்காத எஸ்பிபி “சங்கராபரணம்” படத்தில் கர்நாடக இசையில் பாடி “தேசிய விருது” பெற்றார்.

பாடும் நிலாவின் தாய் மொழி தெலுங்கு.ஆனால் இவர் பாடியதோ 25 மொழிகளில்.

அந்தந்த மொழிக்குரிய தனி உச்சரிப்போடு பாடுவது இவரின் சிறப்பு.

உலகிலேயே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய ஒரே பாடகர் இவர்தான்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது.

அதிகம் பாடியது தமிழில்.அடுத்து தாய் மொழி தெலுங்கில்.

6 தேசிய விருதுகள்,25 ஆந்திர மாநில அரசு விருதுகள்,6 தமிழக அரசு விருதுகள்,50க்கும் மேற்பட்ட தனி அமைப்பு விருதுகள்,2 டாக்டர் பட்டங்கள் இவர் சாதனையை அலங்கரிக்கின்றன.

12 மணி நேரத்தில் 21 கன்னடப் பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார்.
அத்தனைப் பாடல்களும் ஹிட்டானது.

தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார்.

அரை நூற்றாண்டுகள்,5 தலைமுறைகள் கடந்து பாடும் நிலாவின் இசைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இன்றுடன் ஓய்வு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *