தென்னை மரத்தில் ஊடக சந்திப்பை நடத்திய இலங்கை அமைச்சர்!

தேங்காய், பனை, மற்றும் இறப்பர் தயாரிப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இன்று வழமையான முறைகளை மாற்றி வித்தியாசமான முறையில் ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொண்டார்.

தேங்காய் மரம் ஏறுவதற்கு இலகுவாக உருவாக்கப்பட்டுள்ள இயந்திரம் ஒன்றை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தென்னை மரத்தில் ஏறி இவர் ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார்.

இலங்கையின் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மரம் ஏறும் சாதனைத்தை தயாரித்துள்ளதாகவும், தான் மிகுந்த சந்தோஷமடைவதாகவும் அமைச்சர் கூறினார்.

தென்னை மரம் ஏறுபவர்களுக்கு ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது கூலியாக கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது என தெரிவித்ததுடன் வரகாபொல பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இந்த மரம் ஏறும் இயந்திரம் பற்றியும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் தெங்கு சார்ந்த உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரித்தமையே தேங்காயின் விலை துரிதமாக அதிகரித்தமைக்கு காரணம் என்று தெங்கு, பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான அருந்திக்க பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *