வளரும் தலை முறை அறிய வேண்டிய அஷ்ரப் எனும் சரித்திரம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மறைந்த ஸ்தாபக தலைவர் எம். எச். எம் அஷ்ரப் அவர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள்,கருத்துக்கள் பல்வேறு கோணங்களில் முன் வைக்கப்படலாம்.ஆனால் அவர் வழங்கிய அரசியல் தலைமைத்துவம்,இந்த அநாதை சமூகத்தை இந்த நாட்டில் கௌரவத்துடனும்,தன்மானத்துடனும் வாழ வைத்ததை யாரும் மறக்க முடியாது.
1989 ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒரு கார சாரமான விவாதம் நடைபெற்றது. அது அஷ்ரப் அவர்களுக்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன அவர்களுக்கும் இடையிலாகும்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழ் தேசிய இராணுவத்தினராலும்,விடுதலைப்புலிகளாலும்,இந்திய இராணுவத்தினராலும் கோரமாக பாதிக்கப்படுகின்றனர்.இவர்களுக்கான பாதுகாப்பை யார் உறுதி செய்வது ?
கௌரவ பாதுகாப்பு அமைச்சர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க தவறி இருக்கின்றார்,எனது மக்களின் நிலை சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக மாறி வருகின்றது என தெரிவித்த போது,பொறுப்பு சொல்ல வேண்டிய ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சொன்ன பதில் என்ன தெரியுமா? புலிக்கு பசித்தால் புல்லையா தின்பது? என்று இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பதிலளித்த காலத்தில்தான் தலைவர் அஷ்ரப் அவர்கள் இந்த சமூகத்திற்கு தலைமை கொடுக்க வந்தார்கள்.
அவரைப்பற்றியும், சமூகத்தை எவ்வளவுக்கு அவர் முதன்மைப் படுத்தினார் என்பது பற்றியும் நான் அறிந்த சம்பவங்களை தற்கால அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கலாம் என நினைக்கின்றேன்.
சம்பவம் 01
அஷ்ரப் ஒரு இனவாதி அல்ல.
1919 ம் ஆண்டு இலங்கைக்கு பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரசுக்கு சேர் பொன்னம்பலம் அருணாசலம் தலைவராக நியமிக்கப்பட்டார்.இலங்கையின் அரசியல் வரலாற்றை பொறுத்தவரையில் ஒரு சிறு பான்மை இனத்தவர் தேசிய ரீதியிலான ஒரு அமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்டது சாதாரன் விடயமல்ல.காலப்போக்கிலே நடந்தது என்ன?
மேல் மாகாணத்தில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதி நிதித்துவம் கோரி பொன்னம்பலம் அருணாசலம் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று தமிழர் மக ஜன சபையை நிறுவினார்.இது அப்போதைய ஆளுநர் வில்லியம் மன்னிங் இன் இந்த நாட்டின் தேசிய ஒற்றுமையை குலைப்பதற்கான ஒரு சூழ்ச்சியாக கூட கருதப்பட்டது. இந்தத்திட்டத்திற்கு பொன்னம்பலம் அருணாசலம் பலியானார்.இப்படி பொன்னம்பலம் அருனாசலத்துக்குக் கிடைத்த வாய்ப்பு தலைவர் அஷ்ரப் அவர்களிக்கு கிடைத்திருக்குமானால் இந்த நாட்டின் தலை விதியே மாறி இருக்கும் என்பதற்கு அஷ்ரப் அவர்களின் அந்திம அரசியலில் தெளிவான பதில் இருந்தது.
1980 கலீல் இனவாத முனைப்புக்களோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டாலும் அவருக்கு கிடைத்த அரசியல் அனுபவங்கள்,இந்த நாட்டின் அரசியலை தெளிவாக விளங்கி கொண்டதன் விளைவு போன்றன பின்னாளில் 2000ம் ஆண்டு அவரை ஒரு தேசிய தலைவராக மாற்றியது.
அவர் தன்னை முஸ்லிம் இனத்துக்கான தலைவராக ஆற்ம்பத்தில் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த்தங்கள் இருந்தாலும் பின்னாளில் அவருடைய கனதியான அரசியல் அனுபவங்கள் மூலம் ஒரு தேசிய தலைவராகவே தன்னை அடையாப்படுத்திக்கொண்டார்.அதன் இறுதி முயற்சியாக,தன்னுடைய மனதில் உறுத்திக்கொண்டிருந்த, தான் ஒரு இனவாதி அல்ல என்பதை அடையாளப் படுத்தும் முயற்சியாக தேசிய ஐக்கிய முன்னணி எனும் புதிய அரசியல் கட்சியை இலங்கையில் வாழ்கின்ற மூன்று இன மக்களுக்காகவும் பிரகடனம் செய்தார்.
இங்கு நான் கூற விரும்புவது பொன்னம்பலம் அருணாசலத்துக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பம் அஷ்ரப் அவர்களுக்கு கிடைத்திருந்தால் அவர் அதனை எப்படி பயன் படுத்தி இருப்பார் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.பொன்னம்பலம் அருணாசலம் அவர்களால் 100 வருடங்களுக்கு முன் செய்ய முடியாததை அஷ்ரப் 100 வருடங்களின் பின் செய்து காட்டியமயானது அவர் ஒரு அர்த்தமற்ற இனவாதியாய் இருந்திருக்க முடியாது என்பதனை காட்டுகிறது.
அவர் மரணிப்பதற்கு சில நாட்களின் முன் ஒலுவில் துறைமுக மஹாபொல பயிற்சி மண்டபத்தில் நடந்த தமிழ் சகோதரர்களுக்கான துறைமுக தொழில் நியமனத்தின் போது அவர் தனது மன ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.
தேசிய ஐக்கிய முன்னணி எனும் இந்த வீடு முஸ்லிம் மக்களுக்கானது மாத்திரம் அல்ல ,மாறாக அது இந்த நாட்டில் வாழு தமிழ் சிங்கள முஸ்லிம் மற்றும் அனைத்து மக்களுக்குமானது.இதை முஸ்லிம் மக்கள் எதிர்த்தாலும் சரியே என அவர் தெளிவாக கூறினார்.
இனவாதப்புயலில் அழிந்து கொண்டிருந்த இலங்கையில் தான் ஒரு சிறுபான்மை இனத்தை சார்ந்தவனாக இருந்த போதும் மிக தைரியமாக முழு இலங்கைக்கும் தன்னை ஒரு இலங்கையனாக பிரகடனப்படுத்திய அஷ்ரபை,இந்த நாட்டிலே ஒரு பக்கம் சிங்களப் பேரினவாதமும் அதை ஆயுத பலம் கொண்டு அடக்கி தனது இனத்துக்கு மட்டும் தனி நாட்டை உருவாக்க நினைக்கும் புலிகள் மறுபக்கமும் என துண்டாடி நின்ற இலங்கையில் ஒரு முழு நாட்டுக்கும் தேசிய ஐக்கியத்தை சொல்லிக்கொடுக்க நினைத்த அஷ்ரபின் தைரியத்தை இந்த நூற்றாண்டு இலகுவில் மறந்து விட முடியாது…….
இதுவே அவரின் மரணத்தின் ஆரம்பமா?என சிந்திக்க தோன்றும் விதமாக பின்னாளில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.
தென் கிழக்கு அலகு என்று அடிக்கடி முஸ்லிம் அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.ஆனால் அஷ்ரப் கேட்ட தென்கிழக்கு அலகு பற்றி நம் இளைஞ்சர்கள் எதனை பேருக்கு தெரியும்?
இந்த நாட்டில் 3வது பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் தங்களது அரசியலின் அதி உச்ச அடைவுப்புள்ளியாக எதனை சாதிக்க போகிறது எனும் வினாவிற்கான நமது அரசியல் தலைமைகளின் விடை என்ன?
அரசியல் தீர்வு இலங்கையில் அடயப்ப்படுமாக இருந்தால் அதில் முஸ்லிம்களின் வகிபங்கு என்ன?
இணைந்த வட கிழக்கா?
இணைந்த வட கிழக்குக்குள் தனியான அலகா?
வடக்கிலிருந்து பிரிந்த தனியான கிழக்கா?
மேற்படி நிபந்தனைகளுக்கு கீழ் நாம் பெற வேண்டியது தென் கிழக்கு அலகா?அல்லது முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபையா ?
மேற்படி வினாக்களுக்கு விடை காணும் இறுதி போராட்டத்தில்தான் தலைவர் அஷ்ரப் பலியானார்….
அவருக்குப் பின்னர் சமூக விடுதலைக்கான பயணங்கள் வெறும் இலக்கற்ற அரசியல் சூதாட்டமாகியது…கடந்தது கடந்து போகட்டும்.எதிர்காலம் குறித்து எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டாமா?
இலங்கை முஸ்லிம்களை அஷ்ரப் வழி நடத்திய விதம் வெறும் அரசியலை நோக்கியது மட்டுமல்ல.அஷ்ரபின் அரசியல் வழி நடத்தல்களை அவதானிக்கும் எவரும் அரசியலூடான மகா உன்னதங்களை புரிந்து கொள்ள முடியும்
அவரை விமர்சித்தவர்கள் கூட அவரது கொள்கைகளை மனமார விரும்பினார்கள்.
வாக்களிக்கவும்,மனுக்கொடுக்கவும் மட்டுமே பழக்கப்பட்ட ஒரு சமூகதின் ,காவலாளி உத்தியோகம் அல்லது இரிகேசன் இல் புல் வெட்டும் உத்தியோகம் மட்டும் பெற தெரிந்த ஒரு சமூகத்தின் அரசியலை அவர் பலத்த சவால்களுக்கு மத்தியில் வரைவிலக்கனப்படுத்தினார்.
அவ்வாறு அவர் செய்து காட்டிய அந்த சாதனை தொழில்நுட்பம் அமைச்சுப் பதவிகள் பெறுவதற்கு பயன்படுவது வேடிக்கையானதாகும்.
01.
அஷ்ரப் முன் வைத்த முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை கோரிக்கை என்றால் என்ன?
வட கிழக்கில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரேதேச செயலாளர்களை உள்ளடக்கிய நிலதொடர்பற்ற ஒரு சுயாட்சி பிராந்தியம்.இது இந்தியாவில் பிரெஞ்சு காலனியவாதிகள் கோவா,பாண்டிச்சேரி போன்ற நிலத தொடர்பாற்றிருந்த தங்களது ஆதிக்கப்பரப்புக்குள் இருந்த நிலப்பரப்புக்களை நிர்வாகம் செய்வதற்கு பயன்படுத்திய முறையாகும்.
1987ம் ஆண்டு அஷ்ரப் முஸ்லிம்களுக்கான ஒரு அரசியல் கோரிக்கையாக இதை முன் வைத்தார்.
02.
தென் கிழக்கு அலகு கோரிக்கை என்றால் என்ன?
சம்மாந்துறை,கல்முனை,பொத்துவில் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய நிலத்தொடர்புள்ள அரசியல் சுய நிர்ணய அலகு.
இது பற்றி அஷ்ரப் அவர்கள் 1994ம் ஆண்டு எம்.பௌசர் அவர்களை ஆசிரியராக கொண்டு புதிய வெளிச்சங்கள் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “தென்கிழக்குப் பிராந்தியம் மூன்று சமூகங்களின் ஒற்றுமைக்கான ஒரு முன்மாதிரிப்பூமி’
எனும் ஒரு சிறு கையேட்டில் இவ்வாறு விபரித்திருந்தார்..
“1987ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை கோரிக்கை என்னும் தத்துவார்த்த நிலைப்பாட்டிலிருந்து 1994ம் ஆண்டு தென்கிழக்கு அலகு எனும் யதார்த்த நிலைமைக்கு இறங்கியுள்ளது”
ஆக இந்த தென்கிழக்கு அலகு கோரிக்கையை அன்று விமர்சித்தவர்களும் இருந்தார்கள்.இதற்க்கு அஷ்ரப் பாராளுமன்றத்தில் பதில் தந்தார்…
தென்கிழக்கு அழகானது வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களை அந்நியப்படுத்தி விட்டது என்று கூறுகின்றார்கள்.உண்மை அதுவல்ல காயமுள்ள இடத்திற்கு மருந்து தடவும்போது உடலின் காயமற்ற பகுதியும் மருந்து தனக்கும் வேண்டும் என கேட்பது அறிவீனமாகும் என தர்க்க ரீதயில் பதிலளித்தார்.இது ஒரு தர்க்க ரீதியான வாதமாக இருந்த போதும் இதனுள்ளே அவருடைய செறிவான அரசியல் அனுபவங்களும் இலங்கையின் அரசியல் எதிகாலம் குறித்த புரிதல்களும் அடங்கியுள்ளன.
அப்போது அவருக்கு கிடைத்த கிங் மேகர் அந்தஸ்தை வைத்து முஸ்லிம்களுக்கான ஒரு தனியான,துரிதமாக அடையக்கூடிய ஒரு சுய நிர்ணய அலகு ஒன்றினை பெற்றுக்கொள்ள தீவிரமாக முயற்சித்த அஷ்ரப்க்கு தென் கிழக்கு அலகை தவிர வாய்ப்பான தெரிவுகள் இருக்க நியாயமில்லை.
அவெருக்கெதிராக பௌத்த தீவிரவாதம் விழிப்படைந்த வேளை அது.முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியினை தாங்கிக்கொள்ள முடியாத அவரது அரசியல் எதிரிகள் அவரை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கிய வேளை,இலங்கையின் அரசியல் களத்தில் சிறுபான்மை இனத்தின் அரசியல் நலன்களை உறுதிப்படுத்தும் செயல்களுக்கு அழிவு காத்திருக்கிறது என்று அவர் புரிந்து கொண்ட வேளை அது.
இப்படியான சூழ் நிலைகளில் அவருக்கு அடயப்படுவதர்க்கு கடினமான அல்லது சாத்தியமற்ற முயற்சிகளை விவாதிப்பதை விட்டு விட்டு நாட்டின் சகல முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு அரணாக அவர் தென் கிழக்கு அலகை முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கையாக பிரகடனப்படுத்தினார்.
03.
2000ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டமும் பிராந்திய சபைகளும்
அஷ்ராபுக்கும் இந்த நாட்டு முஸ்லிம்,தமிழ் சிறுபான்மை மக்களுக்கும் ஏன் சிங்கள மக்களுக்கும் மிக முக்கியமான வருடம்.அஷ்ரப் இந்த ஆண்டுதான் மரணித்தார் என்பதற்காக அல்ல.இந்த ஆண்டுதான் இந்த நாட்டில் பௌத்தம் மடிந்த வருடம்.அரசியல் தருமம் அடியோடு இந்த நாட்டில் சாய்ந்த வருடம்.சுமார் 3 1/2 மனிதியாலம்கள் இந்த நாட்டுப்பாராளுமன்றதில் இந்த நாட்டுக்கு விமோசனம் தரக்கூடிய ,நிரந்தர சமாதானம் தரக்கூடிய,புதிய அட்திகாரப்பரவலாக்கல் முறை ஒன்றினை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு சட்ட நகல் ஒன்றினை அவர்சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருந்தார்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அந்த நகல்களை எரித்து பாராளுமன்றத்தில் புகையூட்டிக்கொண்டிருந்தது.
தமிழர் விடுதலை கூட்டணி கூட பலமாக எதிர்த்ததுஆளும் கட்சியின் திட்டம் கூட அதை தோட்கடிப்பது என்பதாகத்தான் இருந்தது.அஷ்ரப் இதை தாமதமாகவே புரிந்து கொண்டார்.சந்திரிகாவின் ஆசீர்வாதமும் அப்படியே இருந்தது.
அப்படி என்ன பாதகத்தை அஷ்ரப் செய்தார்?
இந்த நாட்டில் பிரிவினைக்கு அத்திவாரமாக இருந்த அதிகார குவிப்பு முறையை இல்லாமலாக்கி சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிராந்தியங்கள உருவாக்கி,பிளவு பட்டுப்போயிருக்கின்ற நாட்டை ஒற்றுமை படுத்த அவர் மேற்கொண்ட உழைப்புக்கு கிடைத்த பரிசுதான் அது.
யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வட பிராந்தியம்,கிழக்குக்கு தனியான பிராந்தியம்.தென் கிழக்கு பிராந்தியம்,ஊவா பிராந்தியம்,அம்பாற மக்கள் விரும்பினால் அம்பாற பிராந்தியம் அல்லது விரும்பினால் ஊவா வுடன் இருக்கலாம்.தென் பிராந்தியம்,மலையாக பிராந்தியம். இவ்வாறு அதிகார பரவலாக்கலை இனங்களுக்கிடையே சுமூகமாக பகிர பெரும் பிரயத்தனம் எடுத்தார்.
நடந்தது என்ன?
ஓன்று பட்ட தமிழ் ஈழம் பரி போய் விடும் என பயந்த தமிழர் கூட்டணி வன்மையாக எதிர்த்தது.
இந்த நாடே சிங்கள் பௌத்த பூமியாக மாற வேண்டும் என கனவு கண்டு கொண்டிருந்த பேரினவாதம் எதிர்த்தது.
அஷ்ரப் அனாதயானார்.
இந்த நாட்டின் நிலை கண்டு மனம் வெதும்பினார்.
அண்ணன் இரா சம்பந்தன் அவர்களை பார்த்து சொன்னார்…
அண்ணன் சம்பந்தன் அவர்களே…!
துரதிஸ்டவசமாக 2,3 வாக்குகளால் இந்த தீர்வு திட்டம் தோல்வி அடையுமாயி தமிழ் மக்கள் அதற்க்கான விலையை கொடுக்க வேண்டி வரும் என்றார் முள்ளி வாய்க்காலில் 100000 மக்கள் பலியான போது அஷ்ரபை சம்பந்தன் அய்யா நினைவுபடுத்தி பார்த்திருப்பார்….
இவ்வாறான ஒரு சாணக்கியனை இலங்கையின் அரசியல் சூழல் வாழ அனுமதிக்கத்தது வியப்பொன்றுமில்லைதான் இருந்தாலும் எந்த சமூகத்திலிருந்து வந்தாரோ அந்த சமூகம் அவரை மறக்கலாமா..?
தேசிய தலைவர் அஷ்ரப் அவர்கள் அரசியல் பயின்றது தந்தை எஸ்.ஜே.வி. செல்வ நாயகம் அவர்களிடம்தான் என்பது நம்மில் எத்தனை இளைஞர்களுக்கு தெரியும்?
இனவாதம் குடிகொண்ட இலங்கையின் சமகால அரசியல் பரப்பில் இருந்து கொண்டு இந்த உண்மையை நம்புவது கடினம்தான் இருந்தாலும் அதுதான் உண்மை.
இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி வேண்டி செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பிரசாரப்பீரங்கியாக வலம் வந்தவர்தான் பின்னாளில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஆனார் என்றால் நம்புவார்களா தமிழ் இளைஞர்கள்?
கஷ்டமாக இருந்தாலும் அதுதான் உண்மை.
எஸ்.ஜே.வி ஐ என் இறக்கைகளில் காணுங்கள் என அவருக்கு மரண அஞ்சலிக்கவிதை எழுதி அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும் என தைரியமாய்ச சொன்ன அஷ்ரப் தான் பின்னாளில் எந்த தமிழ் மக்களுக்குள் வாழ நினைத்தாரோ அதே தமிழ் மக்களால் கல்முனையில் இருந்து துரத்தப்பட்டார்.
அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் பெற்று தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்று தருவான் என சொன்ன அஷ்ரப் தான் பின்னாளில் தமிழ் மக்களுக்கு விமோசனம் வேண்டி போராடுகிறோம் என சொன்ன புலிகளால் கொலை செய்யப் பட வேண்டியவர் என முத்திரை குத்தப்பட்டார்.
அவருடைய அரசியலின் ஆரம்பம் இலங்கை தமிழ் அரசு கட்சியாக அமைந்து முடிவு இலங்கை முஸ்லிம் காங்கிரசாக எப்படி மாறியது…?ஏன் மாறியது?
இடையில் தேசிய ஐக்கிய முன்னணி எனும் சிந்தனை எப்படி அவருக்குள்ளே முளைத்தது?
இவ்வினாக்களுக்கு விடை தேடும் சமூகம்களாக நம் மாறித்தான் ஆக வேண்டும்…அப்போதுதான் நாம் இலங்கையின் அரசியலையும் அதில் சிறுபான்மையினரின் அரசியல் வரலாற்றையும் அதன் எதிர்காலத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
தலைவர் அஷ்ரப் அவர்கள் தமிழோடும் தமிழ் மக்களோடும் இரண்டறக்கலந்த மனிதர்…ஒருதமிழ்க் கவிஞன்…தமிழ் இலக்கியப்பரப்பிலிருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்று அல்லது கிறிஸ்தவ சைவ இலக்கியங்கள் என்று பிரிப்பது காலக்கிரமத்தில் தமிழ் இலக்கியங்கள் என்று எதையுமே சொல்ல முடியாத நிலையை தோற்றுவிக்கும் என்பதற்காக தமிழ் இலக்கியங்களை மத அடிப்படையில் பிரிக்காதீர் என சொன்ன ஒரு தமிழ்க்காதலன் அஷ்ரப்..
தமிழ் அரசியலுடன் இணைந்து சிங்கள அடக்குமுறையை வன்மையாய் எதிர்த்த இனவாதம் கடந்த அரசியல் தலைமைத்துவம் அஷ்ரப்…அவர் எப்படி இலங்கை முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார்?
தமிழனை தமிழனும் சிங்களவனை சிங்களவனும் மாத்திரம்தான் தலைமை தாங்க வேண்டும் இந்த நாட்டில் ஒற்றை தேசியத்தை கட்டிக்காக்க எவனும் தயாரில்லை என்று இனவாத மலத்தை அள்ளி தின்ன எல்லோரும் தயாரான 1980 களின் அரசியல் சூழல்கள் தலைவர் அஷ்ரபையும் சட்டையை பிடித்து வெளியில் தள்ளியது….அந்த சம்பவம் தான் என்ன?
1980 களில் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தல்களை அப்போதைய ஜே.ஆர் அரசு அறிமுகம் செய்த பொழுது யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைதீவு,வவுனியா, மன்னார்.மட்டக்களப்பு,திருகோணமலை போன்ற அதனை மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான நியமனப்பததிரங்களின் பெயர்ப்பட்டியலுக்கு ஒரு தமிழரை நியமித்த போது அம்பாறை மாவட்டத்துக்கு மட்டும் ஒரு முஸ்லிமின் பெயரை பட்டியல் தலைவராக நியமியுங்கள் என அஷ்ரப் அவர்கள் சொன்ன பொழுது அதை தமிழ் அரசுக்கட்சி ஈற்றுக்கொள்ள மறுத்து ஆ.வேல்முருகு என்பவரை நியமித்தது.
அஷ்ரப் மனம் தளர்ந்தார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஆகக்குறைந்த உரிமையான அம்பாறை மாவட்டதில் கிடைக்கவேண்டிய இந்த வாய்ப்பையே தர முடியாத இந்த அமைப்பு எதிர்காலத்தில் என்ன உரிமையினை போராடி பெற்று தரப்போகிறது.
அம்பாறை மாவட்டத்திலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் இந்த மாவட்டத்தின் தலைமையை ஒரு முஸ்லிம் அலங்கரிப்பதை விரும்பாத இந்த அமைப்பில் இருந்து தனது காலத்தை விரயமாக்காத அஷ்ரப்,முஸ்லிம்களுக்கான மாற்று இயக்கத்தை பற்றி தீவிரமாக யோசித்தார்…
இந்த நாட்டில் இருக்கும் தீவிர மதவாத சிந்தனைகளின் பிடியில் நாமும் சிக்குண்டு நமது சமூகத்தின் தனித்துவம் ஊமயாவதை விட நமக்கான ஒரு சுதந்திர மேடையில் நாமே ஏறி நின்று,இனவாதத்திற்கும் பேரின வாதத்துக்கும் தலை வணங்கி நின்ற முஸ்லிம்களுக்கு அவர்களின் தனித்துவ,தேசிய அடையாளங்களை பிரதி பலிக்க கூடிய ஒரு மாபெரிய அரசியல் கட்சியை உருவாக்கினார்….
அது அஷ்ரபின் தேவை அல்ல..
ஒரு சமூகத்தின் எதிர்காலம் மற்றும் அடையாளத்தை இருட்டடிப்பு செய்ய மற்ற மற்ற இனங்கள் திட்டமிட்டு களம் இறங்குவதை அவதானித்த அவர் வரலாற்றின் நிர்ப்பந்தப்படுத்தலில் இந்த கட்சியை உருவாக்குவது ஒரு வரலாற்று தேவை ஆயிற்று…
இரண்டு இனங்கள் பொருதிக்கொள்ள வாய்ப்பான போர் மேகங்கள் இலங்கையின் அரசியல் வானில் தயாராவதை அவதானித்த அவர் இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக எடுத்த அந்த முடிவின் சாணக்கியம்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்….
இதுகாறுமான இலங்கை அரசியலின் பிந்திக்கிடைத்த அனுபவங்கள்….அஷ்ரப் எதிர்வு கூறியவைகேளே என்பது அவரின் அரசியல் சாணக்கியத்தின் துலங்கலை வெளிக்காட்டுகிறது….
1989 களில் இருந்து 2000ம் வரைக்குமான அவரது பத்து ஆண்டுகால அரசியல் பயணம்தான் இன்னும் வரப்போகும் பல்லாயிரம் ஆண்டுகலானும் நிலைத்து நிற்கும் இன்ஷா அல்லாஹ் !
இது பற்றி அவர் இவ்வாறு கூறினார்…இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இனி எழுதப்ப்படுமாக இருந்தால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் கான்கிரசிக்கு முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் கான்கிரசிக்கு பின் என்றுதான் எழுதப்படும்….என கூறினார்..
நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *