இந்தியாவில் ஒரே நாளில் 94372 பேருக்கு கொரோனா பாதிப்பு!
நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 44.65 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 75 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 94,372 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,54,356 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,114 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 78,586 ஆக உயர்ந்தது.
.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 78,399 பேர் குணமடைந்துள்ளனர்;
.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 37,02,595 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,73,175 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*குணமடைந்தோர் விகிதம் 77.88% ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.65% ஆக குறைந்துள்ளது.
* இந்தியாவில் ஒரே நாளில் 10,71,702 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 5,62,60,928 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!
மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 280138 ; குணமடைந்தோர் : 728512 ; இறப்பு : 29115
தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :47110; குணமடைந்தோர் : 441649; இறப்பு : 8307
டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 28059 ; குணமடைந்தோர் : 181295 ; இறப்பு : 4715
கேரளா : சிகிச்சை பெறுவோர் : 28870 ; குணமடைந்தோர் :75844 ; இறப்பு : 425
கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 97834; குணமடைந்தோர் :344556; இறப்பு : 7161
ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 95733 ; குணமடைந்தோர் : 457008 ; இறப்பு : 4846