உலக சமாதானத்திற்கு அமெரிக்கா அச்சுறுத்தல் சீனா குற்றச்சாட்டு!

வர்த்தகப் போர் மற்றும் கொரோனா பரவலை தொடந்து அமெரிக்கா சீனா ஆகிய இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல், ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை தைவான் மற்றும் தென் சினக்கடல் உள்ளிட்டவற்றில் ஆதிக்கம் செலுத்துவது ஆகிய பல்வேறு சீனாவில் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் சீன அதிகாரிகள் தலைவர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு விசா கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
பதிலுக்கு சீனாவும் அமெரிக்கா மீது தடைகளை விதித்து வருகிறது. இதனிடையே தென் சீனக்கடல் பகுதியை உரிமைக் கொண்டாடி வரும் சீனாவில் கொட்டத்தை அடக்க அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் சீனக்கடல் பகுதியில் அமெரிக்கப் போர்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு இந்தியா மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் கூட்டுப் போர் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறது. மேலும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா உரிமைக்கோரி வரும் நிலையில் அந்நாட்டுடனும் அமெரிக்கா பல்வேறு ஒப்பந்தங்களையும் செய்து வருகிறது. இது சீனாவுக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வு கியான், அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவின் நோக்கங்கள் மற்றும் ராணுவம் மற்றும் சீனாவின் 140 கோடி மக்களுக்கிடையிலான உறவு ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பிராந்திய அமைதியின்மையைத் தூண்டுவது, சர்வதேச ஒழுங்குமுறை விதிகளை மீறுவது மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுப்பது ஆகிய வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதை பல ஆண்டு கால சான்றுகள் காட்டுகின்றன என தெரிவித்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற நாடுகளில் அமெரிக்காவின் மோசமான நடவடிக்கைகளால் சுமார் 800,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *