இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் புதிய மாற்றங்கள்!

ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் புதிய வாகன இலக்க தட்டுகளை (நம்பர் பிளேட்) தபால் மூலம் வீடுகளுக்கு வழங்குவதற்கான புதிய திட்டம் அமுல்படுத்தப்டவுள்ளதாக வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில்வே வண்டிகள் மற்றும் மோட்டார் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இனி பழைய வாகனத் தட்டுகளை மோட்டார் வாகனத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இலக்க தட்டுகளை எரித்து அழிக்கும் பொறுப்பு வாகன உரிமையாளர்களிடமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து மற்றும் ரயில் வண்டிகள் மற்றும்மோட்டார் கைத்தொழில் துறை அமைச்சர் திலும் அமுனுகம இக்கருத்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக இரண்டு மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனத்தை விற்கும்போது இலக்க தகடுகளை மாற்ற வேண்டும் என்று ஒருசட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை அகற்றி புதிய முறையை வகுப்பதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவேதொடங்கிவிட்டோம். இலங்கை பெரிய மாகாணங்களை கொண்ட நாடு ஒன்று அல்ல. எனவே, இத்தகைய சட்டங்கள் தேவையின்றிமக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்குகின்றன.

வரவிருக்கும் வாகன இலக்க தட்டுகளில் வாகன உரிமையாளர் தகவலுடன் ஒரு இலத்திரனியல் சிப்பை நிறுவவுள்ளோம். சிப்புடன் இனை ஸ்கேன் செய்வதன் மூலம் வாகனத்தின் உரிமையாளரின் தகவல்களை எளிதாக அடையாளம் காண முடியும் என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *