குழந்தைகளின் இதயத்தை குறிவைக்கும் கொரோனா!

தற்போது உருவாகி வரும் குழந்தைகளின் ஒவ்வாமை நோய் அறிகுறிகள் கொரோனா வைரசுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அவர்களது இதயம் கடுமையாக பாதிக்கப்படலாமென இ கிளினிக்கல் மெடிசன் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் சில குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பு தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர்களின் இதயம் சேதப்படும் நிலையுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவதாவது,

600இற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அழற்சி நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு செய்த போது ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு அறிகுறி இல்லாமல் 3 அல்லது 4 வாரங்களுக்கு பிறகு அவர்களை வைரஸ் தொற்று தாக்குகிறது என்பது தெரிய வந்தது.சில வாரங்கள் கழித்து குழந்தைகள் உடலில் அழற்சி, வீக்கம் ஆகியவை ஏற்படலாம். அதன்பின் தான் அவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

இதேவேளை விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் 662 அழற்சி நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குழந்தைகளை ஆய்வு செய்தபோது அவர்களில் 71 சதவீதம் பேர் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

60 சதவீதமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமாக பாதிக்கப்பட்டு 8 நாட்கள் வரை வைத்தியசாலையில் இருந்துள்ளனர்.

662 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 73.7 சதவீத குழந்தைகளுக்கு வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

68.3 சதவீதம் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. 90 சதவீத குழந்தைகளுக்கு இதயத்தை ஸ்கான் செய்து பார்த்த போது அதில் 54 சதவீதம் பேரின் முடிவுகள் அசாதாரணமாக இருந்தது. 5இற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை கருவி தேவைப்பட்டது . இதேவேளை 11 குழந்தைகள் இறந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தான் ஆன்டினோவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்களான அல்வரு மற்றும் மோரேரா ஆகியோர் கூறியகையில்,

தற்போது ஒரு புதிய குழந்தைப்பருவ நோய் உருவாகி இருக்கிறது. இது கொரோனா வைரசுடன் தொடர்புடையது. பல உறுப்புகளை பாதிக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது.

இதயம் மற்றும் நுரையீரல், இரைப்பை, குடல் அமைப்பு அல்லது நரம்பியல் மண்டலம் என எதுவாக இருந்தாலும் அந்த நோய் அறிகுறிகள் பலவிதமான ஆபத்துக்களை கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இது மருத்துவர்களுக்கு புரிந்து கொள்வதில் சவாலாகவே இருந்தது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குழந்தைகளை அதிகமாக பாதித்தே வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் – அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *