உலகளாவிய ரீதியில் கொரோனா கோரத்தாண்டவம்!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.83 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,83,618 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,70,60,255 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19,160,040 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 7,016,597 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,709 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியின் ஆவேச தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,110,839 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 70,679 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3,177,673 பேர் குணமடைந்தனர்.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,92,818 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,431,152 ஆக அதிகரித்துள்ளது. 3,707,000 பேர் குணமடைந்தனர்.

* பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,26,203 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,123,000 ஆக அதிகரித்துள்ளது. 3, 296,702 பேர் குணமடைந்தனர்.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,759 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,020,310 ஆக அதிகரித்துள்ளது. 838,126 பேர் குணமடைந்தனர்.

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,687 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 683,702 ஆக உயர்ந்துள்ளது. 506,422 பேர் குணமடைந்தனர்.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,418 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 517,133 ஆக அதிகரித்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,154 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 384,666 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 41,549 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 344,164 ஆக உயர்ந்துள்ளது.

* பங்களாதேஷ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,447 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 323,565 ஆக அதிகரித்துள்ளது.

* பாகிஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298,025 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,534 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276,338 ஆக உயர்ந்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,401 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 251,056 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *