ஓர் அங்குலத்தைக்கூட இந்தியாவிற்கு விட்டுக் கொடுக்க முடியாது சீனா திட்டவட்டம்!

லடாக்கில் ஏற்பட்ட எல்லை பிரச்சனைக்கு முழுக்க முழுக்க இந்தியாதான் காரணம் என்றும், தனது பிராந்தியத்தின் ஓர் அங்குலத்தைக்கூட இழக்க முடியாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

“தற்போது நிலவும் எல்லை பிரச்சனைக்கான காரணம் மற்றும் உண்மைகள் தெளிவாக உள்ளன. இதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க இந்தியாவிடமே உள்ளன. தனது பிராந்தியத்தின் ஓர் அங்குல நிலத்தைக் கூட சீனாவால் இழக்க முடியாது. தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் காக்க சீன படைகள் உறுதியாகவும், திறன் வாய்ந்தவையாகவும், நம்பிக்கை மிக்கவையாகவும் உள்ளன,” என்று சீனாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டபடி பேச்சுவார்த்தை மற்றும் ஒருவரையொருவர் கலந்தாலோசித்தல் ஆகியவை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்துவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வே ஃபெங் ஆகியோர் இடையே நடந்த சந்திப்பிற்குப் பிறகு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ,”இருநாட்டு உறவுகள் மற்றும் இந்தியா – சீனா எல்லை பதற்றம் குறித்து ஆழமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.”

“அதிகளவில் சீனப்படைகளை குவிப்பது, ஆக்ரோஷமான நடத்தை, மற்றும் ஒருதலைபட்சமாக நிலைமையை மாற்ற முயல்வது அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும் என பாதுகாப்புத் துறை உறுதியாக தெரிவித்தது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை மேலாண்மையில் இந்தியப் படைகள் எப்போதும் பொறுப்பான முறையை கையாண்டுள்ளது. ஆனால் அதே சமயம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாப்பதில் இந்தியப் படைகள் உறுதியுடன் உள்ளன என்பதை பாதுகாப்புத் துறை தெளிவாக தெரிவித்து கொள்கிறது.

இருநாட்டு உறவுகளும் மேலும் மேம்பட இந்திய சீன எல்லையில் அமைதியைக் காப்பது அவசியம்; மேலும் வித்தியாசங்கள் சர்ச்சைகளாக மாற இருதரப்பும் அனுமதிக்கக்கூடாது

தற்போதைய நிலைமையை பொறுப்புடன் கையாள வேண்டும். மேலும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் எந்த ஒரு தரப்பும் எடுக்கக்கூடாது.

சீனா உடனான எல்லையை இந்தியா எவ்வாறு பாதுகாக்கிறது?
இந்திய ராணுவம் சீனாவுக்கு எதிராக ஆயுதம் எடுப்பதை தடுத்த 3 ஒப்பந்தங்கள்
மெய்யான எல்லைக் கோட்டு பகுதியில் ராணுவத்தினர் பின்வாங்குவதையும், பதற்றத்தை குறைத்து அமைதி நிலவவும் இருதரப்பினரும் வெளியுறவு மற்றும் ராணுவ மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய, சீனா இடையே நீடித்து வரும் ஆத்திரமூட்டல் செயல்பாடுகள் மற்றும் பதற்றம் தொடர்பாக மாஸ்கோவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங், நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த சந்திப்பு இரண்டு மணிநேரம் இருபது நிமிடங்கள் நீடித்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு, இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள், இப்போதுதான் முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *